Get Adobe Flash player

SEED இன் வரலாறு

சமூக மாற்றத்தின்மேல் ஈடுபாடு கொண்ட 3 நபர்களினால் 1995 இல் SEED தோற்றுவிக்கப்பட்டது.  20 வருட கால உள்நாட்டு முரண்பாட்டினால்  இலங்கையின் வடமத்திய பகுதியிலமைந்துள்ள வவவுனியா மாவட்டத்திலுள்ள பாதிப்பிற்கு இலக்கான மக்களுக்கு உதவ அவர்கள் விரும்பினார்கள். ஜேர்மன் நாட்டு தொண்டு நிறுவனமொன்றின் நிதி அனுசரணையூடன் வவுனியாவிலுள்ள கணேசபுரம் என்னும் இடத்தில் 02 ஏக்கர் காணியினை  அவHகள் வாங்கினார்கள்.
வவுனியா மாவட்டத்திலுள்ள இடம்பெயர்ந்தோர், வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்கள், பெண்தலைமைத்துவ குடும்பங்கள், விசேட தேவைக்குட்பட்டோர்  போன்ற  பாதிப்பிற்கு இலக்கான, இலக்காகக்கூடிய மக்களின் உரிமைகள், நலன்களில் அக்கறைகொண்டு SEED செயற்படுகின்றது. அணிச்செயற்பாடு, பால்நிலைச் சமத்துவம் ஆகியவற்றை SEED மிகவும் வலியுறுத்துகின்றது. SEED இன் முகாமை மட்டத்தில் கூட பால்நிலை மற்றும் இன சமத்துவம் சரியாக பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டுள்ளது.  உலக வடிவிலான  ஒரு தேங்காயிலிருந்து முளைவிடுகின்ற தென்னம் நாற்றே SEED இன் இலச்சினையாகும். தேங்காயானது உலகத்தைக் குறித்துநிற்க, தேங்காயிலிருந்து முளைக்கின்ற நாற்று தமிழ், சிங்கள, முஸ்லிம் சமூகங்களைக் குறிக்கும் பொது அடையாளமாக இருக்கின்றது.

SEED இன் வளர்ச்சிப் பாதையில் முக்கிய மைல்கற்கள் -

  • 1996 இல் சேதன விவசாயப் பண்ணைஇ பெண்கள் வலுவூட்டல் நிலையம்
  • 1997 இல் முதலாவது மீள்குடியேற்றத் திட்டம்
  • 2000 இல் வலுவூட்டல் வளாகத்தின் தோற்றம்
  • 2002 இல் சமூகம்சார் புனர்வாழ்வுத் திட்டம்
  • 2005 இல் ஆழிப்பேரலையினால்  பாதிக்கப்பட்ட மக்களுக்கான திட்டங்கள்
  • 2006 இல் சொந்த அலுவலகக் கட்டிடம்
  • 2007 இல் அவசரகால நிலைமைகளுக்குப் பதிலளித்தல் அமைதியை கட்டியெழுப்புவதற்காக சமுகத்தை வலுப்படுத்தல்
  • 2009 இல் சிறுவர் உளநலத்தினை மேம்படுத்தல் திட்டம்

SEED … இன்று…

SEED 110 ஊழியர்களையும்  வருடாந்தப் பாதீடாக  ஏறத்தாழ 200 மில்லியன் ரூபாவையும் கொண்டுள்ளது. முரண்பாட்டுக்கான தீர்வுகாணல் தொடர்பான பயிற்சிபெற்ற, சமூகம்சார் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றத் நிகழ்ச்சித் திட்டங்களில் பல வருட அனுபவங்களையுடைய ஊழியர்களினால் நிகழ்ச்சித்திட்டங்களும் சேவைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.  
SEED பல பங்குதாரர்களைப் பேணுவதுடன்  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள், அரசாங்கத் திணைக்களங்கள் ஆகியவற்றுடன் சிறந்த வலைப்பின்னல் தொடர்புகளையும்  கொண்டுள்ளது.

Logo

seed logo 2.jpg

Photos