Get Adobe Flash player

சமூகம்சார் புனர்வாழ்வு

சமூகம்சார் புனர்வாழ்வு என்பது உலகளாவிய ரீதியில் நிரூபிக்கப்பட்ட, விசேட தேவைக்கு உட்பட்டவர்களுக்கான ஒரு நிகழ்ச்சித் திட்டமாகும். சமூகத்திலுள்ள விசேடதேவைக்குட்பட்டவர்களின் கல்வி, சட்டரீதியான பிரதிநிதித்துவம் மற்றும் சமூகப் பங்குபற்றுகை ஆகியவற்றை மேம்படுத்துவதே சமூகம்சார் புனர்வாழ்வு நிகழ்ச்சித்திட்டத்தின் குறிக்கோளாகும். அந்த வகையில், SEED இடம்பெயர்ந்த குடும்பங்களின் வாழ்க்கைச் சூழல்களை மேம்படுத்துதல், சுயசார்புள்ள சமூகத்தை உருவாக்குதல், அந்த சமூகங்கள் தமக்கிடையே வலைப்பின்னல் தொடர்புகளை ஏற்படுத்தச்செய்தல் போன்ற செயற்பாடுகளில் தனது முக்கிய கவனத்தைச் செலுத்துகின்றது. இங்கு குறிப்பாக இடம்பெயர்ந்த மக்கள் மீதும், பாதிப்புறுநிலையிலுள்ள  விசேடதேவைக்குட்பட்டவர்களின் மீதும் SEED விசேட கவனம் கொண்டிருக்கின்றது.improv._menth._H._workshop_CBR

வலுவூட்டல் வளாகம்

 

SEED இன்  இன்றைய சமூகம்சார் புனர்வாழ்வு நிகழ்ச்சித் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியது 2000ம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டு இன்று கற்றலில் சிரமமுள்ள, கேட்டல் மற்றும் பேச்சு சிரமமுள்ள சுமார் 80 மாணவர்களுக்கான கல்வியை வழங்கும் விசேட பாடசாலையான வலுவூட்டல் வளாகம் ஆகும்.
இந்த வளாகமானது கல்வி, தொழில்சார் பயிற்சி ஆகிய இரண்டு பிரிவுகளில் செயற்படுகின்றது. மாணவர்கள் சுயமாக வாழ்வதற்கான நாளாந்த வாழ்க்கைத்திறன் பயிற்சிகளை கற்பிப்பதில் இங்கு அதிக கவனம் செலுத்தப்படுவதுடன், மாணவர்களின் வளர்ச்சியில் பெற்றோரின் ஆழ்ந்த பங்களிப்பும் வலியுறுத்தப்படுகின்றது.  வளாகத்தில் மாணவர்களுக்கான போஷாக்கு உணவுத் தயாரிப்பில் மாணவர்களின் பெற்றோர் தினமும் ஈடுபடுபது அதற்கு நல்ல உதாரணமாகும்.
வலுவூட்டல் வளாகத்தில் தற்போது 34 ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். கற்பித்தல் குழு, சட்டக் குழு, மனவெழுச்சிக் குழு என அணி அடிப்படையில் பொறுப்புக்கள் பகிரப்பட்டு ஆசிரியர்கள் செயற்படுகிறார்கள்.
ஒவ்வொரு வகுப்பிற்குமான பாட ஆயத்தங்களை கற்பித்தல் குழு உறுதிசெய்த பின்னரே அவை மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுகின்றன. அத்துடன்,  தயாரிக்கப்பட்ட பரீட்சை வினாத்தாள்களின் உள்ளடக்கத்தை உறுதிசெய்வதும் கற்பித்தல் குழுவின் பொறுப்பாகும்.
வளவாளர் அணியானது ஆசிரியர்களின் கற்பித்தலைக் கண்காணித்து மதிப்பீடு செய்வதுடன் அவர்களுக்கான மேலதிக பயிற்சிகளையும் வழங்குகின்றது. மனவெழுச்சிக் குழுவானது மாணவர்களின் மனவெழுச்சிகளைக் கண்காணிப்பதற்கு பொறுப்பான குழுவாகும். பாடசாலையில் பின்பற்றப்படவேண்டிய விதிமுறைகள் சரியாகப் பின்பற்றப்படுவதை சட்டக்குழு மேற்பார்வை செய்கின்றது.   
பெற்றோர்களின் அனுசரணையுடன் மாணவர்களுக்கான மருத்துவப் பரிசோதனைகள் வவுனியா பொது வைத்தியசாலையிலும் கொழும்பிலும் மேற்கொள்ளப்படுகின்றன.
வளாகத்தில் தற்போது 18 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களில் கணிசமானோர்  கொழும்பிலுள்ள தேசிய கல்வி நிறுவகத்தினால் நடாத்தப்படும் விசேட கல்வி கற்கை நெறியினை பூர்த்திசெய்தவர்களாவர். அது மட்டுமன்றி, அவர்கள் அனைவரும் சைகை மொழிப் பயிற்சியையும் பெற்றிருக்கின்றனர்.
ORHAN எனப்படும் விசேட தேவைக்குட்பட்டோரின் புனர்வாழ்வுக்கான நிறுவனம், சமூக சேவைத் திணைக்களம், இளைஞர் சேவைகள் மன்றம் ஆகியவற்றுடனான வலைப்பின்னல் தொடர்புகளின் பயனாக வலுவூட்டல் வளாக மாணவர்கள் பல சாதனைகளைப் புரிந்துள்ளார்கள். உதாரணமாக, ORHAN நிறுவனத்தினால் ஆண்டுதோறும் நடாத்தப்படுகின்ற விசேட தேவைக்குட்பட்டவர்களுக்கான  பிராந்திய மட்ட விளையாட்டுப் போட்டியிலும், Sunshine Game அமைப்பினால் கொழுப்பில் வருடந்தோறும் நடாத்தப்படும் விசேட தேவைக்குட்பட்டவர்களுக்கான தேசிய விளையாட்டுப்போட்டியிலும் வளாக மாணவர்கள் பற்குபற்றி பல பதக்கங்களையும் சான்றிதழ்களையும் பெற்றுவருகின்றனர்.
மாணவர்களின் வரவினை உறுதிப்படுத்தும் நோக்கில் வவுனியா மாவட்டத்திலுள்ள 18 கிராம அலுவலர் பிரிவுகளிலுள்ள வளாக மாணவர்களுக்கான போக்குவரத்தினை வழங்குவதில் 2 பஸ்கள் தினமும் இரண்டு தடவைகள் மாணவர்களின் வீடுகளுக்கும் வளாகத்திற்குமிடையில்; சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றன. வலுவு+ட்டல் வளாகத்தின் சிறப்பியல்புகள் -

  • போஷாக்குமிக்க இலவச மதிய உணவும் பாலும் மாணவர்களுக்கு தினமும் வழங்கப்படுதல்
  • மாணவர்களின் உடற் திணிவு சுட்டியினை தொடர்ச்சியாக அளவிடுதல்
  • சைகை மொழி மற்றும் இயன் மருத்துவப் பயிற்சிகள்
  • விசேட தேவைக்குட்பட்டவர்களுக்கென புதுமாதிரியிலமைந்த  பாடசாலைச் சீருடைக்கான இலவச துணி
  • மாணவர்கள் தங்களின் ஈடுபாடுகளைப் பகிர்ந்துகொள்வதற்கான தளமாக மாணவர் மன்றம்
  • மாணவ முதல்வர்களை தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கும் நடைமுறை
  • பாடசாலையில் மாணவர்களின் பொருத்தமான நடத்தையை மேம்படுத்துவதற்கான வெகுமதித் திட்டம்
  • பெற்றோருக்கான தகவல் கையேடு
  • பெற்றோர்களுக்கான மாதாந்தக் கூட்டம் மற்றும் வளாக கள உத்தியோகத்தரின் வீட்டு விஜயங்கள்
  • மாணவர்களுக்கான உடற்பயிற்சி மற்றும் நடனப்பயிற்சி
  • விசேட தேவைக்குட்பட்ட மாணவர்களுக்கான அன்றாட வாழ்க்கைத் திறன் பயிற்சி மற்றும் நடத்தைசார் கல்வியினை வழங்கும் சிறுவர் இயற்பாங்குக் கல்விமுறை (மொன்ரிசொறி)
  • தன்னார்வத் தொண்டுகளில் துறைசார் நிபுணர்களின் அனுசரணை

 

தொழில்சார்  பயிற்சி

பின்வரும் துறைகளில் தொழில்சார் பயிற்சியானது வழங்கப்படுகின்றது -

  • சித்திரமும் கைப்பணியும்
  • தையல்
  • கொத்துவேலை மற்றும் தச்சுக்கலை
  • கணினி வகுப்புக்கள்
  • தோட்டக்கலை

வளாகத்தினால் வழங்கப்படும்  தொழில்சார் பயிற்சியானது தேசிய தொழில் தகைமை முறைமைக்கு ஏற்ற வகையில் பாடத்திட்டங்களைக் கொண்டிருக்கின்றது.   பயிற்சியை நிறைவுசெய்த மாணவர்களுக்கு தேசிய தொழிற் பயிற்சி அதிகாரசபையினால் அங்கீகாpக்கப்பட்ட சான்றிதழ்கள்  வழங்கப்படுகின்றன.  
 தொழில்சார் பயிற்சி மாணவர்களினால் உருவாக்கப்பட்ட சில காட்சிப் பொருட்களின் நிழற்படங்களை நீங்கள் இந்த இணையத்தளத்திலுள்ள நிழற்படக் காட்சியகத்தில் காணலாம்.

வருங்காலத்தில்  -

வருங்காலத்தில்  வலுவூட்டல் வளாகமானது வளநிலையமாக பரிணமிக்கும். ORHAN நிறுவன ஊழியர்களுடன் இணைந்து இயன் மருத்துவ சிகிச்சைப் பயிற்சிகளும் பிற பயிற்சிகளும் இங்கு வழங்கப்படும். விசேட தேவைக்குட்பட்டவர்களுக்கான வளங்கள் மற்றும் அவர்களின் தேவைகளை நிறைவுசெய்வதற்கு ஏதுவான சூழலை  சமூக உணர்வூட்டலின் மூலம் உருவாக்குவதில்  விசேட கவனம் செலுத்தப்படும். அத்துடன், வலைப்பின்னல் தொடர்புகளை ஏற்படுத்தி விசேட தேவைக்குட்பட்டவர்களின் சட்டரீதியான நலன்களை பிரதிநிதிப்படுத்துவதிலும் கவனம் செலுத்தப்படும்.

விசேடகல்விப்  பிரிவு  

அரச பாடசாலைகளில் விசேடதேவைக்குட்பட்ட மாணவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள விசேட கல்விப் பிரிவிற்கான அரசாங்கத்தின் உதவிகள் மட்டுப்படுத்தப்பட்டு காணப்படுகின்றன. போதுமான வகுப்பறை வசதிகள் மற்றும் போதிய பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் இன்றி  அவை இயங்குகின்றன. விசேட தேiவைக்குட்பட்ட மாணவர்கள் அரச பாடசாலைகளில் தமது கல்வியை தொடர்வதை ளுநுநுனு; பலமாக ஆதரிக்கின்றது.
ளுநுநுனு ; கூட்டுக் கற்றல் முறையைப் பின்பற்றுவதுடன் பின்வரும் நடவடிக்ககை;டாக அதற்கான தளங்களையும் உருவாக்குகின்றது -
·     ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறைகள் மற்றும் கருத்தரங்குகளை  நடாத்துதல். தொண்டர்களுக்கு பயிற்சி வழங்கி, அதனூடாக அரச பாடசாலைகளின் விசேட கல்விப் பிரிவில் அவர்கள் ஆசிரியர்களாகப் பணியாற்றுவதற்கான வாய்ப்பை வழங்குதல்
·     கேட்டல் பேச்சுச் சிரமமுடைய மாணவர்களுக்கான சைகை மொழிப் பயிற்சி அவர்கள் சமூகத்துடன் ஒன்றிணைவதற்கு பெரிதும் உதவுகின்றது.
·     மாணவர்களின் பெற்றோர்களுடன் நெருங்கிய தொடர்புகளை  ளுநுநுனு  பேணுகின்றது. மாணவர்களின் குடும்பச் சூழ்நிலையையும் அவர்களுக்கான தேவைகளையும் அறிந்துகொள்வதற்காக வீட்டு விஜயங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
·    அரச பாடசாலைகளில் விசேட தேவைக்குட்பட்டவர்களுக்கான அணுகு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதிலும்  ளுநுநுனு  பங்காற்றுகின்றது. மேலும், மாணவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், புத்தகங்கள், பாடசாலைக் கலைநிகழ்வுகளுக்கான  பொருட்கள் போன்றவற்றையும்,  கற்றலையும் கற்பித்தலையும் இலகுவாக்குவதற்கான காட்சிசார் உதவுகருவிகளையும்  ளுநுநுனு  வழங்குகின்றது. விசேட தேவைக்குட்பட்ட மாணவர்களுக்கும் சாதாரண மாணவர்களுக்குமிடையிலான உறவினை மேம்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வுக் கருத்தரங்குகள், விசேட நிகழ்வுகள் போன்றவற்றையும் நடாத்துகின்றது.
·    மாணவர்களுக்கான  மருத்துவப் பரிசோதனைக்கான  வசதிப்படுத்தல்கள், வைத்தியர்களால் சிபார்சு செய்யப்படும் மருத்துவ உபகரணங்களை மாணவர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கான வசதிப்படுத்தல்கள் ஆகியனவும் மேற்கொள்ளப்படுகின்றன.
·    அரசுசார் அமைப்புக்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள், சமூக புனர்வாழ்வுக் குழுக்கள் போன்ற சமூக அமைப்புக்கள் ஆகியவற்றுடனான  கூட்டுறவின் மூலம்  விசேட தேவைக்குட்பட்டவர்களுக்கு ஏற்ற சூழலை உருவாக்குவதற்கான  விழிப்புணர்வு மேற்கொள்ளப்படுகின்றது.     

சிறுவர் உளநலத்தினை மேம்படுத்தல்
உள்நாட்டு முரண்பாடு, வௌ;ளம், ஆழிப்பேரலை, கல்வியிலும் பயன்தரு பொழுதுபோக்கிலும் ஈடுபடுவதற்கான நிதி வசதியின்மை ஆகியவற்றினால் ஏற்பட்ட அனுபவங்களினால் உளரீதியாகப் பாதிக்கப்பட்ட 6-18 வயதுக்குட்பட்ட மாணவர்களினை இலக்காகக் கொண்டு இத்திட்டம்  உருவாக்கப்பட்டது.
விளையாட்டுக்கள், பயன்தரும் பிற பொழுதுபோக்குகளினூடாக மாணவர்களின் மனநலப் பிரச்சினைகளை அடையாளம் கண்டு,  அப்பிரச்சினைகளினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கும்  ஒரு முயற்சியே இதுவாகும். பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், தொண்டர்களின் உதவியுடன் இது மேற்கொள்ளப்படுகின்றது.  இத்திட்டத்தில் 18 குழுக்களாகப் பிரிக்கப்பட்ட 3200 மாணவர்கள் உள்ளடங்குகின்றனர். இத்திட்டத்தின் முக்கிய செயற்பாடுகளாவன -
·    வவுனியா பொது வைத்தியசாலையின் மனநல வைத்தியர்களின் அனுசரணையுடன் மாணவர்களை மருத்துவப் பரிசோதனை செய்தல்
·    திட்ட நடவடிக்கைகளில்  ஈடுபடுவதற்கான  வழிகாட்டுதல்களை தொண்டர் குழுக்களுக்கு வழங்குதல்
·    மாணவர்களுக்கு புத்தகங்கள், சீருடைத் துணி, பாடசாலைப் பை போன்ற பாடசாலை உபகரணங்களை வழங்குதல்
·    கலாசார நிகழ்வுகளை ஒழுங்குசெய்தல், அவற்றிற்கான பொருட்களை வழங்குதல்
·    விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல், சிறுவர் குழுக்களிடையே பயன்தரு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நடாத்துதல்
·    விளையாட்டுகளினூடாகத் திறன்களை வளர்ப்பதற்கு ஊக்குவித்தல்
·    சமவயது மாணவ குழுக்களிடையே உறவைப் பலப்படுத்துவதற்காகவும், பாடசாலையில் பெற்ற அறிவினை மேம்படுத்துவதற்காகவும் பொழுதுபோக்குச் சுற்றுலாக்களை ஒழுங்குசெய்தல்
·    மாணவ குழுக்களுள்ள கிராமங்களிலுள்ள நூலகங்களின் வசதிகளை அதிகரித்தல்
·    வலைப்பின்னல் தொடர்புகளினூடாக ஏனைய உதவிகளை பெற்றுக்கொடுத்தல்


கிராம மட்ட அணி
இந்தத் திட்டமானது  மிகவும் பாதிப்பிற்குள்ளான விசேட தேவைகளைக்குட்பட்பட்ட நபர்களைக்  கொண்ட குடும்பங்களை இலக்காகக்கொண்டு உருவாக்கப்பட்டதாகும்.
முதலில், எவ்வகையான அனுசரணை அவர்களுக்குத் தேவையாய் இருக்கின்றது என்பதைத் தீர்மானிப்பதற்காக மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டு அவர்களின் விசேட தேவை என்ன என்பது சரியாக  இனங்காணப்படும். பின்னர், அவர்களின் விசேட தேவையின் தன்மைக்கு  ஏற்ப இயன் மருத்துவப் பயிற்சிகளை ளுநுநுனு கள ஊழியர்கள் வழங்குவார்கள். விசேட தேவைக்குட்பட்டோருக்கான  உதவுகருவிகளைப் பெற்றுக்கொடுப்பதில் ளுநுநுனு அனுசரணை செய்யும்.  இந்த உதவுகருவிகள்  மிகவும் விலையுயர்ந்தவை என்பதும்,   விசேட தேவைக்குட்பட்டோருக்கான   சிகிச்சைப் பயிற்சிகள் தொடர்ச்சியாக நீண்ட காலத்திற்கு வழங்கப்படவேண்டும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.  விசேட தேவையை அடையாளங்கண்ட பின்னர்,  கள ஊழியர்கள் விசேட தேவைக்குட்பட்ட நபருடனும் அவரது குடுப்பத்தினருடனும் கலந்துரையாடி வாராந்த திட்டமிடலை மேற்கொள்ளுவார். இந்தத் திட்டமிடலின் அடிப்படையிலேயே விசேட தேவைக்குட்பட்ட நபருக்கான நாளாந்தப் பயிற்சிகள் பெற்றோரின் பங்குபற்றலுடன் வழங்கப்படும். பயனுறு தன்மையை உறுதிப்படுத்துவதற்காக திட்டமிடலானது அடிக்கடி மீளாய்வு செய்யப்பட்டுப்  பொருத்தமான வகையில் மாற்றப்படும்.
 வீட்டு வேலைகளைச் செய்வதற்கு  விசேட தேவைக்குட்பட்டவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுவதுடன்,   அவர்களின் குடும்பங்களுக்கு  சுயதொழிலை விருத்திசெய்வதற்காக சிறு கடனுதவிகளும் வழங்கப்படுகின்றது. 2011 இல், கிராம மட்ட அணியினர்  வவுனியா மாவட்டத்திலுள்ள 07 கிராம அலுவலர் பிரிவுகளில்  திட்டச் செயற்பாடுகளை மேற்கொண்டுவருகின்றனர். இவ்வணியினர் இயன் மருத்துவம்,  தொழில்சார் சிகிச்சை, பேச்சுமொழிச் சிகிச்சை, சமூகம்சார் புனர்வாழ்வு ஆகிய துறைகளில் பயிற்றப்பட்டவர்களாவர்.
ளுநுநுனு இன் வழிகாட்டலின் கீழ் 07 சமூகப் புனர்வாழ்வுக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.  இந்தக் குழுவில் விசேட தேவைக்குட்பட்டோர், கிராம அலுவலர், கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், மாதர் சங்க உறுப்பினர்கள், நலன் விரும்பிகள் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர். இக்குழுக்களின் உறுப்பினர்களுக்குப் பின்வரும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன -
·    புனர்வாழ்வுப் பயிற்சி
·    சமூகச் செயற்பாடுகள் தொடர்பான பயிற்சிகள்
·    வருமானப் பெருக்கம் தொடர்பான  பயிற்சிகள்
விசேடதேவைக்குட்பட்டவர்களின் தேவைகளை நிறைவுசெய்வதற்கும், அவர்களுக்கான சமூக அங்கீகாரத்தைப் பெற்றுக்கொடுப்பதற்குமான அனுசரணைகளை  சமூகம்  முடிந்த வரையில் சுயமாகத் தொடர்ந்து முன்கொண்டுசெல்வதற்குத் சமூகத்தினை வலுவு+ட்டுவதே இத்திட்டத்தின் குறிக்கோளாகும்.     
சமூகப் புனர்வாழ்வுக் குழு உறுப்பினர்கள் மற்றும்  விசேட தேவைக்குட்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கான  பயிற்சிகளையும், கூட்டங்களையும் ளுநுநுனு நடாத்துகின்றது.

Logo

seed logo 1.jpg

Photos