Get Adobe Flash player

ஒருங்கிணைந்த மீள்குடியேற்றம் மற்றும் மீள்குடியமர்வுத் திட்டங்கள்


Resettlement

சிதம்பரபுரம் நலன்புரி நிலையத்தில் வாழ்ந்துகொண்டிருந்த பாதிப்பிற்கு இலக்கான மக்களை இலக்கு குழுக்களாகக் கொண்டு 1996 இல் SEED இன் முதலாவது மீள்குடியேற்றத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அந்த இலக்கு குழுக்கள் -

  • பெண் தலைமைத்துவக் குடும்பங்கள்
  • விசேட தேவைக்குட்பட்டோர்
  • வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்கள்

முதற்கட்டமாக, வீட்டுத் திட்டத்திற்கான அடிப்படைத் தகுதிகளைக் கொண்டிருந்த 10 குடும்பங்கள் தெரிவுசெய்யப்பட்டு பாரதிபுரம் என்னும் இடத்தில் குடியேற்றப்பட்டனர்.  

மீள்குடியேற்றச் செயன்முறையானது பின்வரும் முறையில் மேற்கொள்ளப்பட்டது –

    • மீள்குடியேற்றம் தொடர்பான சட்ட, நிர்வாக  விடயங்கள் அனைத்தும் அவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டன (காணி உரிமம், பிறப்பு இறப்பு திருமண அத்தாட்சிப் பத்திரங்கள் பெறுதல் போன்றன..)
    • மீள்குடியேற்றத்திற்கான தயார்ப்படுத்தல்கள்  மேற்கொள்ளப்பட்டன (மதிப்பீடு)
    • தங்குமிடம், அடிப்படைவசதிகள், உணவு ஆகியன வழங்குதல்
    • மருத்துவ சேவைக்கான வசதிப்படுத்தல்கள்
    • வீட்டுத் தோட்டம் மற்றும் கோழி வளர்ப்பு தொடர்பான வழிகாட்டல்கள்
    • கிணறுகள், மலசலகூடங்களை துப்பரவு செய்தல், புனரமைத்தல் மற்றும் புதிதாகக் கட்டிக்கொடுத்தல்
    • நிலையான வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான அனுசரணைகள்
    • கல்வி மற்றும் சமூக வலைப்பின்னல்
    • SEED இன்னும் பல மீள்குடியேற்றத் திட்டங்களை மேற்கொண்டதன் பயனாய்  மீள்குடியேற்றம் என்ற துறையில் நீண்ட அனுபவத்தைக் கொண்டிருக்கின்றது.

ஆண்டு

மீள்குடியேற்றப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை

மாவட்டம்

1997

10

வவுனியா

2000

65

வவுனியா

2002

270

வவுனியா

2002

250

வவுனியா

2004

406

முல்லைத்தீவு

2007

79

வவுனியா

2010

324

வவுனியா

 

 

          
       
       
       
     

 

 

 

 

 

 

 

 

 

 உள்நாட்டு முரண்பாடு, வெள்ளம் மற்றும் ஆழிப்பேரலை போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பல நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு இந்த மீள்குடியேற்றத் திட்டங்கள் புதிய நம்பிக்கையை அளித்துள்ளன.
வீடமைப்புச்  செயன்முறையில்  பயனாளிகளின் விருப்புக்களுக்கு இடமளிப்பது SEED இன் மீள்குடியேற்றத் திட்டங்களின் சிறப்பம்சமாகும்.  கட்டுமான வேலைகளில் பயனாளிகளின்  முனைப்பான பங்களிப்பு ஊக்குவிக்கப்படுவதுடன் அவர்களின் விருப்பங்களுக்கு ஏற்றவாறு  கட்டுமான வேலையாட்களை வேலைக்கமர்த்தும் சுதந்திரமும் அவர்களுக்கு வழங்கப்படுகின்றது. கட்டுமானத்திற்குத் தேவையான பொருட்களை SEED வழங்கும். கட்டடப் பொறியியலாளர் தலைமையில் இயங்கும் அணியொன்று  கட்டுமான வேலைகளை தள மேற்பார்வை செய்யும்.
பயனாளிகளை வலுவூட்டும் நடவடிக்கைகள்  SEED ஊழியர்களால்  3-5 வருடங்களுக்கு மேற்கொள்ளப்படும். கட்டுமானம் தொடர்பான கண்காணிப்புடன்,  சமூகத்தில் உணர்வுள்ள சகவாழ்வு வாழ்வதற்கு முக்கிய பங்காற்றும் சமூக உட்கட்டுமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன

Logo

seed logo 2.jpg

Photos